அதானி – ஹிண்டன்பர்க் : செபிக்கு உச்ச நீதிமன்றம் 3 மாதங்கள் கெடு – தீர்ப்பு முழு விவரம்


பட மூலாதாரம், கெட்டி படங்கள்

ஹிண்டன்பர்க் அறிக்கையின் குற்றச்சாட்டின் அடிப்படையில் அதானி குழுமத்திற்கு எதிராக நடக்கும் விசாரணையை வேறு நிறுவனத்திற்கு மாற்றக்கோரிய வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை, ஜனவரி 3) தீர்ப்பளித்துள்ளது.

இதில் அதானி குழுமத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் தொகுப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த மனுக்கள் ஹிண்டன்பர்க் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவைக் கோரியிருந்தன.

இந்த பிரச்னையை கடந்த ஆண்டு, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் ஒரு குழுவை நீதிமன்றம் நியமித்தது. அதே சமயம் இந்த விவகாரத்தை விசாரிக்குமாறு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தை (செபி) நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.



source

leave your comment

Your email address will not be published. Required fields are marked *

Top