ஆச்சரியம்.. பால்வெளி மண்டலத்தை தாண்டியும் கிரகம் உள்ளது.. பார்க்க சனி மாதிரி தெரிகிறது: நாசா ஆய்வு | First planet outside Milky Way Galaxy detected by the NASA

Washington oi-Veerakumar
Updated: Tuesday, October 26, 2021, 20:26 [IST]
வாஷிங்டன்: பால்வெளி மண்டலத்திற்கு வெளியே முதல்முறையாக ஒரு கிரகம் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. சனி கோள் போன்ற பொருள், கருந்துளையைச் (black hole) சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பால்வெளி என்பது நம் சூரிய மண்டலத்தை உள்ளடக்கிய ஒரு விண்மீன் பேரடை ஆகும். பால் வழி என்பது 150,000 முதல் 200,000 ஒளியாண்டுகள் வரை விட்டம் கொண்ட ஒரு பேரடையாகும். 100 முதல் 400 பில்லியன் விண்மீன்கள் இங்கு இருக்கலாம் என்று அறியப்படுகிறது. மேலும் இதில் குறைந்தபட்சம் 100 பில்லியன் கோள்கள் இருக்க வாய்ப்புள்ளதாம். பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த ‘சலுகை..’ 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் இந்த பால்வெளிக்குள் எல்லாம் முடிந்து விட்டது என்பது இதுவரையிலான கருத்தாக இருந்தது. வானியலாளர்கள் இப்போது ஒரு படி மேலே சென்று சூரிய குடும்பத்திற்கு அப்பால் மட்டுமல்ல, பால்வெளி விண்மீனின் முழு நீளத்திற்கு அப்பாலும் முதல் கிரகத்தைக் கண்டறிந்துள்ளனர். வேர்ல்ஃபூல் கேலக்ஸி பால்வீதி விண்மீனுக்கு அப்பால் ஒரு கிரகம் ஒரு நட்சத்திரத்தை கடக்கும் அறிகுறிகள் கண்டறியப்படுவது இதுவே முதல் முறை. அமெரிக்காவிலுள்ள, நாசாவின் சந்திரா எக்ஸ்ரே ஆய்வகத்தால் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது M51 அல்லது, வேர்ல்ஃபூல் கேலக்ஸி என்றும் அழைக்கப்படுகிறது. பால்வீதிக்கும் அப்பால் வானியலாளர்கள் பல ஆண்டுகளாக இதுபோன்ற 4,000 க்கும் மேற்பட்ட புறக்கோள்களைக் கண்டறிந்துள்ளனர். அவை அனைத்தும் பூமியிலிருந்து சுமார் 3,000 ஒளியாண்டுகளுக்கும் குறைவான தொலைவில் உள்ள பால்வீதியின் எல்லைக்குள் உள்ளன. ஆனால் M51 இல் உள்ள எக்ஸோப்ளானெட் சுமார் 28 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும், அதாவது பால்வீதியில் உள்ளதை விட ஆயிரக்கணக்கான மடங்கு தொலைவில் இருக்கும். புதிய உலகங்கள் “எக்ஸ்-ரே அலைநீளங்களை பயன்படுத்தி கிரகங்களை தேடி வருகிறோம். இதன்மூலம் புதிய உலகங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு முயற்சியை முன்னெடுக்கிறோம். மற்ற பால்வீதிகளை கண்டுபிடிக்க சாத்தியங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுள்ளது” என்று வானியல் இயற்பியல் மையத்தின் விஞ்ஞானி ரோசன்னே டி ஸ்டெபனோ கூறியுள்ளார். இவர்தான் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கியவர். கருந்துளை உள்ளது இந்த பைனரி அமைப்பில் கருந்துளை உள்ளது. அதை, சூரியனை விட 20 மடங்கு நிறை கொண்ட ஒரு துணை நட்சத்திரம் சுற்றி வருகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தகவல்களின் அடிப்படையில், M51-ULS-1 இல் உள்ள எக்ஸோப்ளானெட், கிரகம், விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டுபிடித்த சனி கிரகத்தின் அளவோடு கிட்டத்தட்ட பொருந்திப் போகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். கருந்துளையை சுற்றி வரும் கோள் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இணை ஆசிரியர் நியா இமாரா கூறுகையில், “இப்போது அதிருஷ்டவசமாக நாம் இந்த கிரகத்தை எக்ஸ்ரே கதிர்களால் கண்டுபிடித்துள்ளோம். ஆனால் அது கருந்துளையை சுற்றும் வேகம் எவ்வளவு என தெரியவில்லை. எனவே மீண்டும் நமது நேர் கோட்டிற்கு அது வரும்போதுதான் அந்த கிரகத்தை பார்க்க முடியும். அதற்கு பல தசாப்தங்களாக நாம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பது ஏமாற்றமான விஷயம்” என்று தெரிவித்துள்ளார். மீண்டும் தரிசனம் கிடைக்குமா? இந்த பெரிய அமைப்பில் உண்மையில் ஒரு கிரகம் இருந்தால், அது நியூட்ரான் நட்சத்திரம் அல்லது கருந்துளையை உருவாக்கிய சூப்பர்நோவா வெடிப்பில் இருந்து தப்பித்திருக்க வேண்டியிருக்கும் என்பதால், அது ஒரு மோசமான காலத்தை கடந்து நீடிக்கும் கோளாகத்தான் இருக்க முடியும். ஒரு கட்டத்தில் துணை நட்சத்திரம் ஒரு சூப்பர்நோவாவாக வெடித்து, மிக அதிக அளவிலான கதிர்வீச்சுடன் மீண்டும் கிரகத்தை வெடிக்கச் செய்யவும் வாய்ப்பு உள்ளது என்று வானியலாளர்கள் கருதுகிறார்கள். எனவே, அடுத்த முறை இந்த கிரகத்தை விஞ்ஞானிகள் பார்க்க முடியுமா, முடியாதா என்பதை உறுதி செய்ய காத்திருக்க வேண்டியதுதான் ஒரே வழியாகும்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
First planet outside Milky Way Galaxy detected by the NASA, Saturn-like object is orbiting a black hole, said Astronomers.

Source link

Thank You
by GAGA TV

leave your comment

Your email address will not be published.

Tags

bse hdfc hdfc வங்கி icici பத்திரங்கள் lkp பத்திரங்கள் macd nse vodafone யோசனை அச்சு வங்கி அதானி நிறுவனங்கள் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆர்பிஐ இந்தியா இன்ஃபோசிஸ் ஊட்டி எங்களுக்கு உணவளித்தது எங்களுக்கு பங்குகள் எஸ்பிஐ ஐசிசி வங்கி சந்தை கண்ணோட்டம் சந்தைக்கு முன்னால் சுவர் தெரு சென்செக்ஸ் செபி ஜியோஜித் நிதி சேவைகள் ஜெரோம் பவல் டவ் ஜோன்ஸ் டாடா மோட்டார்கள் டிசிஎஸ் தலால் தெரு நம்பிக்கை நாஸ்டாக் நிஃப்டி நிஃப்டி50 நிஃப்டி தொழில்நுட்ப பகுப்பாய்வு பங்கு சந்தை பங்கு யோசனைகள் பஜாஜ் நிதி பாரத ஸ்டேட் வங்கி பார்தி ஏர்டெல் மத்திய ரிசர்வ் மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் ரிலையன்ஸ் தொழில்கள் ரெலிகேர் வாங்க வேண்டிய பங்குகள்

Recent Ads

Top