டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுகள் அறிவிப்பு! தலைமை செயலகத்தில் பணி.. விண்ணப்பிப்பது எப்படி?


டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுகள் அறிவிப்பு! தலைமை செயலகத்தில் பணி.. விண்ணப்பிப்பது எப்படி?

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 161 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தமிழகத்தில் அரசு பணிகளுக்கான தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தி வருகிறது. டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பாதிக்கப்பட்டன. தற்போது டிஎன்பிஎஸ்சி சார்பில் பல்வேறு பணிகளுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அடேங்கப்பா.. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு.. 92 பணிக்கு விண்ணப்பித்தவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா? அடேங்கப்பா.. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு.. 92 பணிக்கு விண்ணப்பித்தவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா?

  161 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு

161 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு

அந்த வகையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம்161 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி 4 பிரிவுகளில் தலைமை செயலக பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக 161 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. சட்டம் மற்றும் நிதித்துறையை தவிர்த்த தலைமை செயலக பிரிவு அலுவலர் பணியில் 74 பேர், நிதித்துறையின் தலைமை செயலக பிரிவு அலுவலர் பணியில் 29 பேர், சட்டம் மற்றும் நிதித்துறையை தவிர்த்த தலைமை செயலக உதவியாளர் பணிக்கு 49 பேர், நிதித்துறைக்கான தலைமை செயலக உதவியாளர் பிக்கு 9 பேர் என மொத்தம் 161 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

  சம்பளம் எவ்வளவு?

சம்பளம் எவ்வளவு?

அதாவது தலைமைச் செயலகப் பிரிவு அலுவலர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர), தலைமைச் செயலகப் பிரிவு அலுவலர் (நிதித்துறை) பணிகளுக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.36,400 முதல் ரூ.1,34,200 வரை, சட்டம் மற்றும் நிதித்துறையைத் தவிர்த்த தலைமைச் செயலக உதவியாளர் மற்றும் நிதித்துறைக்கான தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.73,700 வரையும் சம்பளம் கிடைக்கும்.

  வயது வரம்பு எவ்வளவு?

வயது வரம்பு எவ்வளவு?

தலைமைச் செயலகப் பிரிவு அலுவலர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர), தலைமைச் செயலகப் பிரிவு அலுவலர் (நிதித்துறை) பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். நிதித்துறையை தவிர்த்த தலைமை செயலக உதவியாளர் மற்றும் நிதித்துறைக்கான தலைமை செயலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயதானது 01.07.2022 எந்த தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

  கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

தலைமை செயலக பிரிவு அலுவலர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர), சட்டம் மற்றும் நிதித்துறையை தவிர்த்த தலைமை செயலக உதவியாளர் மற்றும் நிதித்துறைக்கான தலைமை செயலக உதவியாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தலைமை செயலக பிரிவு அலுவலர் (நிதித்துறை) பணிக்கு பிகாம் (பி.காம்), பொருளாதாரம் (பொருளாதாரம்), புள்ளியியல் (புள்ளியியல்) பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

  கட்டணம் எவ்வளவு?

கட்டணம் எவ்வளவு?

விண்ணப்பம் செய்யும்போது ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லுக்காக ரூ.150, தேர்வு கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் குரூப் 5 ஏ தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். டிசம்பர் 18 ஆம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண இங்கே கிளிக் செய்யவும்

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல இங்கே கிளிக் செய்யவும்

ஆங்கில சுருக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 5A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 161 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.Source link

leave your comment

Your email address will not be published.

Tags

bse hdfc hdfc வங்கி icici பத்திரங்கள் lkp பத்திரங்கள் macd nse vodafone யோசனை அச்சு வங்கி அதானி நிறுவனங்கள் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆர்பிஐ இந்தியா இன்ஃபோசிஸ் ஊட்டி எங்களுக்கு உணவளித்தது எங்களுக்கு பங்குகள் எஸ்பிஐ ஐசிசி வங்கி சந்தை கண்ணோட்டம் சந்தைக்கு முன்னால் சுவர் தெரு சென்செக்ஸ் செபி ஜியோஜித் நிதி சேவைகள் ஜெரோம் பவல் டவ் ஜோன்ஸ் டாடா மோட்டார்கள் டிசிஎஸ் தலால் தெரு நம்பிக்கை நாஸ்டாக் நிஃப்டி நிஃப்டி50 நிஃப்டி தொழில்நுட்ப பகுப்பாய்வு பங்கு சந்தை பங்கு யோசனைகள் பஜாஜ் நிதி பாரத ஸ்டேட் வங்கி பார்தி ஏர்டெல் மத்திய ரிசர்வ் மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் ரிலையன்ஸ் தொழில்கள் ரெலிகேர் வாங்க வேண்டிய பங்குகள்

Recent Ads

Top