தேர்வு, நேர்காணல் இல்லை.. ரயில்வே வேலை காத்திருக்கு.. 2,409 காலியிடங்கள் அறிவிப்பு!


எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், வயர்மேன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுனருக்கான அறிவிப்பை மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. பணிக்கு எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாகக் கொண்டவர்களும், இந்தியர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்: இந்த ஆள்சேர்க்கை அறிவிப்பின் மூலம் 2,409 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தெரிவு முறை: 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எழுத்து, வாய்மொழி போன்ற எந்த தேர்வும் நடத்தப்படாது.

கல்வித் தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10m வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில (என்.சி.வி.டி/எஸ்.சி.டி.வி) கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய வர்த்தகத்தில்(வர்த்தகம்) சான்றிதழ் பெற வேண்டும்.

இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி தேதி 28/09/2023 ஆகும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்புவோர் 29-08-2023 அன்று 15 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும்.இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடையவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடையவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறலாம்.

https://rrccr.com எந்த இணைய பக்கத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஏன் அப்ரண்டிஸ் பணிகள் முக்கியத்துவம் பெறுகிறது:

இந்திய ரயில்வே குறிப்பிட்ட பிரிவுகளில் பழகுனர் சட்டத்துக்கு உட்பட்டு 1963 ஆகஸ்ட் முதல் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் எந்த போட்டி அல்லது தேர்வு இன்றி பழகுனர்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.

அத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு ரயில்வே பயிற்சி மட்டுமே அளித்து வந்த போதிலும், ஆட்சேர்ப்பு நடைபெறும் முதல் நிலைக்காக அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் ( நிலை – 1 ஆட்சேர்ப்பு அறிவிப்பு முந்தைய Gr. ‘D’ பிரிவு பதவிகள் (கிரேடு பே – ரூ.1800/-)) 20 சதவீத இடங்களை இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்கிறது. எனவே, பயிற்சியை முடித்தவர்கள் நிரந்தர பணிகளில் சேர்க்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.Source link

leave your comment

Your email address will not be published. Required fields are marked *

Top