பிளஸ் டூ 2 முடித்தவர்களா? SSC தேர்வுக்கு தாமதமின்றி விண்ணப்பிக்கவும்-சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க!


பிளஸ் டூ 2 முடித்தவர்களா? SSC தேர்வுக்கு தாமதமின்றி விண்ணப்பிக்கவும்-சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க!

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

சென்னை: மத்திய அரசின் தென்மண்டலப் பணியாளர் தேர்வாணையம் (SSC), ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான தேர்வு 2023 (நிலை-1) ஆகஸ்ட் மாதம் கணினி அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர், டிஐபி (டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர்) போன்ற பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்களின் வயது, கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு அட்டவணை எதுவும் விண்ணப்பிக்க வேண்டும் போன்ற தகவல்கள் இந்தத் தேர்வாணையத்தின் அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

SSC-ன் CHS (10+2) LEVEL தேர்வுகள் ஆகஸ்டில் நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் (ssc.nic.in) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 08.06.2023. (23:00) ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி தேதி 10.06.2023 (23:00). ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனுப்பும் புகைப்படத்தில் தொப்பியோ, கண்ணாடியே அணிந்திருக்கக்கூடாது. அவர்கள் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும்.

தென்னக பகுதிகளில் கணினி மூலம் நடைபெறும் இந்தத் தேர்வு 22 மையங்களில் ஆகஸ்ட் – 2023-ல் நடைபெறுகிறது. ஆந்திரா மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 8 மையத்திலும், தெலங்கானாவில் 3 மையங்களிலும் நடைபெறவுள்ளது.

SSC-ன் CHS (10+2) LEVEL தேர்வுகள் ஆகஸ்டில் நடைபெறும்.
ஆங்கில சுருக்கம்

பணியாளர் தேர்வாணையம் 09.05.2023 அன்று “ஒருங்கிணைந்த உயர்நிலை (10+2) தேர்வு, 2023”க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குழு C பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான போட்டித் தேர்வை ஆணையம் நடத்தும். கீழ் கோட்ட எழுத்தர்/இளைய செயலக உதவியாளர், மற்றும் இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள்/அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு அமைப்புகள்/சட்டப்பூர்வ அமைப்புகள்/ தீர்ப்பாயங்கள் போன்றவற்றுக்கான டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள். நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.Source link

leave your comment

Your email address will not be published. Required fields are marked *

Tags

bse hdfc hdfc வங்கி icici பத்திரங்கள் lkp பத்திரங்கள் macd அச்சு வங்கி அதானி நிறுவனங்கள் ஆர்பிஐ இன்ஃபோசிஸ் ஊட்டி எஸ்பிஐ ஐசிசி வங்கி சந்தை கண்ணோட்டம் சந்தைகள் சந்தைக்கு முன்னால் சுவர் தெரு சுஸ்லான் ஆற்றல் சென்செக்ஸ் செபி செய்திகளில் பங்குகள் ஜியோஜித் நிதி சேவைகள் டாடா எஃகு டாடா மோட்டார்கள் டிசிஎஸ் தலால் தெரு நம்பிக்கை நாஸ்டாக் நிஃப்டி நிஃப்டி50 நிஃப்டி தொழில்நுட்ப பகுப்பாய்வு பங்கு பங்குகள் பங்கு சந்தை பங்கு பரிந்துரைகள் பங்கு யோசனைகள் பஜாஜ் நிதி பாரத ஸ்டேட் வங்கி பார்தி ஏர்டெல் மோதிலால் ஓஸ்வால் மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் ரிலையன்ஸ் தொழில்கள் வங்கி வாங்க வேண்டிய பங்குகள் வீக்கம்

Recent Ads

Top