பேடிஎம் வங்கி பிப்.29-ம் தேதியுடன் முடக்கம் – யுபிஐ, பேடிஎம் வாலட் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்த முடியுமா?


பட மூலாதாரம், கெட்டி படங்கள்

படக்குறிப்பு,

பேடிஎம் வங்கி செயல்பாடுகள் பிப்ரவரி 29 முதல் முடக்கம்

  • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி, பிபிசி தமிழ்

டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கி ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதமே புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்து அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து தணிக்கையாளர்கள் குழுவை ரிசர்வ் வங்கி நியமித்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி அந்நிறுவனத்தையே ஒட்டுமொத்தமாக முடக்கியுள்ளது ரிசர்வ் வங்கி.

இதனால், அந்த வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வங்கிசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பேடிஎம் வங்கிக்கு ஏன் இந்த திடீர் தடை? அதனால் வாடிக்கையாளர்களுக்கு வரும் பாதிப்புகள் என்ன? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

30 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட பேடிஎம் வங்கி

டிஜிட்டல் யுகத்தில் பெருநகரங்கள் தொடங்கி சிறு கிராமங்கள் வரை டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை பெருகி விட்டது. இந்நிலையில், பேடிஎம் , கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பல யுபிஐ செயலர்கள் மக்கள் மத்தியில் பணப் பரிவர்த்தனை செய்வதில் அதிகம் புழக்கத்தில் உள்ள செயலிகளாகும்.source

leave your comment

Your email address will not be published. Required fields are marked *

Top