மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் வேலை
திருவள்ளூர் மாவட்ட நல சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட புகையிலை பொருட்கள் பயன்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தில் (மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு பிரிவு) உள்ள காலிப்பணியடங்களுக்கு ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: சமூக பணியாளர் (சமூக பணியாளர்)
கல்வித் தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், சமூகவியல் அல்லது சமூக பணியாளர் உள்ளிட்ட பாடங்களில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும். சுகாதார துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் தொகுப்பூதியமாக ரூ.23,800 வழங்கப்படும்.
நிபந்தனைகள்: இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது என்றும் எந்த ஒரு காலத்திலும் நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை, நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம்
துணை சுகாதார பணிகள் அலுவலகம், 54/5. ஆசூரி தெரு,
திருவள்ளூர் மாவட்டம் – 602 001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதையும் வாசிக்க: பாரத் ஸ்டேட் வங்கியில் 6,160 காலியிடங்கள் அறிவிப்பு : உடனே அப்ளை பண்ணுங்க!
விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 13.09.2023 ஆகும். மேலும், விவரங்கள் அறிந்து கொள்ள 044 -27661562 என்ற தொலைபேசி எண்ணிலும், dphtlr@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.